Monday, January 27, 2014

Chenna Masala Cooking In Tamil | சன்னா மசாலா

சன்னா மசாலா (chenna masala recipe)

 தேவையான பொருட்கள்:
  • சுண்டல் / கொண்டக்கடலை / சன்னா – 1 கப்
  • வெங்காயம் -1
  • தக்காளி -2
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் -1
  • சிவப்பு மிளகாய்த்தூள் 1 டீஸ்பூன்
  • கரம் மசாலா தூள் -1/2 தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் 1/4 தேக்கரண்டி
  • உப்பு
அரைக்க தேவையான பொருட்கள்:
  • தேங்காய் -1/4 கப்
  • பெருஞ்சீரகம் -1/2 தேக்கரண்டி
தாளிக்க:
  • சீரகம் – 1 தேக்கரண்டி
  • எண்ணெய் 1 tblsp
மேலே தூவ : 
  • வெங்காயம் (பொடியாக நறுக்கியது )
  • கொத்தமல்லி இலை (பொடியாக நறுக்கியது )
  • எலுமிச்சை சாறு
செய்முறை:
  1. கொண்டைக்கடலையை முதல் நாள் இரவு முழுவதும் ஊற வைத்து குக்கரில் 3-4 விசில் விட்டு எடுத்து கொள்ளவும்.
  2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சீரகம் தாளித்து அதனுடன் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
  3. அதனுடன் இஞ்சி,பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும் .
  4. வதக்கியதும் அத்துடன் தக்காளி,உப்பு சேர்த்து வதக்கி மசாலா பவுடர் ,மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.குறைந்த தீயில் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  5. அதனுடன் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க வைக்கவும்.
  6. அதனுடன் வேக வைத்த கொண்டைக்கடலை சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்கவைக்கவும்.குழம்பு கெட்டியாக வரும் பொழுது அடுப்பை அணைத்து விடவும் .
  7. பரிமாறும் பொழுது பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி எலுமிச்சை வைத்து ரொட்டி ,பூரி ,சப்பாத்தி ,நாண் உடன் சாப்பிட அருமையாக இருக்கும்.

No comments:

Post a Comment